இஸ்ரோவின் சோதனை வெற்றி

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ மையத்தில் கிரையோஜினிக் இஞ்சின் தயாரிக்கப்பட்டு அதன் பல்வேறு கட்ட சோதனைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஹைப்ரிட் மோட்டார் பொருத்தப்பட்ட கிரையோஜினிக் இஞ்சின் சோதனை இஸ்ரோ மையத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த சோதனையில் 30 கிலோ நியூட்டன் திறன் கொண்ட ஹைப்ரிட் மோட்டார் இன்ஜின் சுமார் 15 வினாடிகள் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதில் மோட்டாரின் செயல்திறன் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் பத்ரி நாராயணமூர்த்தி கூறுகையில், எதிர்கால ஏவு வாகனக்களில் பயன்படுத்த கூடிய வகையில், ஹைப்ரிட் மோட்டார் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.