தேவை இஸ்ரேல் உத்தி

பா.ஜ.கவின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி ரவி, ஏ.என்.ஐக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘ஒரு பயங்கரவாத அமைப்பு ஒரு நாட்டையே கைப்பற்றியது வேதனை அளிக்கிறது. தலிபான்கள் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படுகின்றனர். அதற்கு சீனாவின் ஆதரவும் உள்ளது. நம் நாட்டில் ஏராளமான ஊடுருவல்காரர்களும் தேச விரோதிகளும் உள்ளனர். அவர்களை கட்டுப்படுத்துவது ஒரு சவால். அவர்கள் பாரதத்தில் நுழைய சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. தலிபான்கள் காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டிவிடும் வாய்ப்பும் காலிஸ்தான் ஆதரவாளர்களை தூண்டிவிடும் வாய்ப்பும் உள்ளது. எனினும் மத்திய அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும், தேசத்தின் பாதுகாப்பில் 100 சதவீதத்தை உறுதி செய்யும். என்னைப் பொறுத்தவரை, இஸ்ரேலின் பயங்கரவாத எதிர்ப்பு உத்தியை நாம் பின்பற்ற வேண்டும், அப்போது நம் நாடு பாதுகாப்பாக இருக்கும்’ என்று கூறினார்.