முஸ்லிம், கிறிஸ்துவர் மற்றும் யூதர்களின் புனித இடமாக உள்ள இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேமிற்கு, மூன்று மதத்தினரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால், இரண்டு அண்டை நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு உள்ளது. இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படும். தற்போது இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது. பாலஸ்தீனிய அரசே அங்கு ஹமாஸ் உட்பட பல பயங்கரவாத குழுக்களை ஆதரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இஸ்ரேலை தொடர்ந்து சீண்டிவரும் ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் சமீபத்தில் நடத்திய வான்வழி தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமையகமான 13 மாடி காசா டவரையும் இஸ்ரேல் தரைமட்டமாக்கியது. இதற்கு பதிலடி தரும் விதமாக, ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தை நோக்கி 110 ராக்கெட்டுகளையும், தெற்கு நகரமான பீர்ஷேவாவை நோக்கி 100 ராக்கெட்டுகளையும் ஏவியது. இத்தாக்குதலில் இஸ்ரேலின் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது.
பாரதப்பெண் பலி
இந்த பயங்கரவாதத் தாக்குதலில், 3 பெண்கள் உட்பட 33 பேர் பலியாயினர். பலியானவர்களில், கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த நர்ஸ் சவுமியாவும் ஒருவர். இதனை உறுதி செய்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் முரளிதரன், தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் இதற்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.
காக்கும் இரும்புக்கூரை
ஹமாஸ் பயங்கரவாத குழுவின் இந்த கொடூரமான தாக்குதலில் இருந்து அந்த நகரம் மிகப்பெரிய சேதமின்றி தப்பியதற்கு அதன் மிக உயர்ந்த வான் பாதுகாப்பு அமைப்பே காரணம். இரும்புக்கூரை (அயர்ன் டோம்) என அழைக்கப்படும் இந்த எதிர் வான் தாக்குதல் அமைப்பு, பயங்கரவாதிகளின் 90 சதவீத ராக்கெட்டுகளை வானிலேயே வீழ்த்தி அந்த நகரங்களை பாதுகாத்துள்ளது. உயர் தொழில்நுட்பம் கொண்ட இந்த குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு, ராக்கெட்டுகள், பீரங்கிகள், மோட்டார் குண்டுகளை இடைமறித்து அழிக்கும் வகையில் அமெரிக்க துணையோடு அமைக்கப்பட்டு 2011 முதல் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பின்வாங்கிய காங்கிரஸ் தலைவர்கள்
இந்நிலையில், பாலஸ்தீனிய ஹமாஸ் முஸ்லிம் பயங்கரவாதிகள் இஸ்ரேலில் ஒரு இந்திய செவிலியரைக் கொன்றதற்காக, பயங்கரவாதிகளை கண்டித்து முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார் கேரள காங்கிரஸ் தலைவரான வீணா எஸ் நாயர். ஆனால், இவரது பதிவிற்கு எதிராக பல முஸ்லிம்கள் அவரை கண்டித்தனர். இதனால், தனது முகநூல் பதிவை அழித்துவிட்டு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் வீணா. முன்னதாக, இதே போன்றதொரு பதிவிற்காக, கேரளா, பாலா தொகுதி எம்.எல்.ஏவான மணி சி கப்பனுக்கும் முஸ்லிம்கள் மிரட்டல் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் நிதியமைச்சர்
அசாமில் பா.ஜ.க சட்டமன்ர தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதிய முதலமைச்சராக பதவியேற்ற ஹிமந்தா பிஸ்வ சர்மாவின் அமைச்சரவையில், அஜந்தா நியோக் என்ற ஒரு பெண் முதன்முறையாக நிதியமைச்சராக பெறுப்பேற்றுள்ளார். இவர் சமூக நலத்துறை பொறுப்பையும் சேர்த்தே கவனிக்கிறார். முன்னதாக மத்திய பா.ஜ.க அரசு நிர்மலா சீதாராமனை முன்பு ராணுவத்துறை அமைச்சராகவும் தற்போது நிதியமைச்சராகவும் நியமித்து பாரதத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரத்தையும் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.