செப்டம்பர் 11, 2001ல், அமெரிக்காவில் அல்-கய்தா நிகழ்த்திய நான்கு பயங்கரவாதத் தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சி அடைய வைத்தன. உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டது, அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனும் தாக்கப்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர். இந்த சோக நிகழ்வின் நினைவு நாளை முன்னிட்டு, அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த துளசி கபார்ட் தனது டுவிட்டர் பதிவில், ‘9/11 அன்று அமெரிக்காவிற்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களையும் போர் அறிவிப்பையும் ஊக்குவித்தது இஸ்லாமிய சித்தாந்தம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இஸ்லாமிய சித்தாந்தம்தான் உலகெங்கிலும் உள்ள பயங்கரவாத தாக்குதல்களைத் தூண்டுகிறது. முஸ்லிம் நாடுகள் என கூறப்படும் ‘பாகிஸ்தான், துருக்கி, ஈரான், சௌதி அரேபியா போன்ற நாடுகள், கிறிஸ்தவர்கள், ஹிந்துக்கள், பௌத்தர்கள், நாத்திகர்கள் போன்றவர்களுக்கு எதிரான பாகுபாடான கொள்கைகளை கொண்டுள்ளது’ என பதிவிட்டுள்ளார்.