இந்த தண்ணீர் தொட்டி அதிகபட்சம் ஒரு 50 ஆயிரம் ரூபாய் ஆகும். பிளம்பிங் சாதனங்கள், சிமெண்ட், செங்கல், மணல், கொத்தனார் கூலி எல்லாம் சேர்த்து அதிகபட்சமாக ஒரு 10 ஆயிரம் ஆகலாம். ஆக எப்படி பார்த்தாலும் 60 ஆயிரத்தை தாண்டாது. ஆனால் இதன் மதிப்பு 4.9 லட்சமாம்! நல்ல விடியல்தான். சமீபத்தில்கூட, தி.மு.கவின் கனிமொழி ஒரு சிறிய பேருந்து நிறுத்தத்தை 1.54 கோடி ரூபாய் செலவில் திறந்துவைத்ததும் ஏனோ நினைவுக்கு வருகிறது.