மேற்கு வங்கத்தி, சிலிகுரி, பிதான்நகர், அசன்சோல், சந்தர்நாகூர் ஆகிய நான்கு மாநகராட்சிகளுக்கும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருணாமூல் காங்கிரஸ் அமோக வெற்றியைப் பெற்றது. அதனை அக்கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் மட்டுமே கொண்டாடி வருகின்றனர். ஆனால், பொதுமக்களும், பா.ஜ.க, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் இதனை ஏற்கும் மனநிலையில் இல்லை. காரணம், இத்தேர்தலின்போது திருணமூல் காங்கிரசை சேர்ந்த குண்டர்கள் நடத்திய அட்டூழியங்கள்தான் அவர்களின் மனதில் நிழலாடுகிறது. திருணமூல் காங்கிரசை சேர்ந்த ரௌடிகள் இத்தேர்தலின்போது, வேட்பாளர்களையும் வாக்காளர்களையும் மிரட்டினர். தேர்தல் சமயத்தில் கைகளில் உருட்டுக்கட்டை, கத்தி போன்ற பயங்கரமான ஆயுதங்களுடன் தெருவில் சுற்றித் திரிந்து மக்களை பயமுறுனர். வாக்குச்சாவடிகளை கைப்பற்றினர். அதற்கு அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் அதற்கு துணை போயினர். பல்வேறு இடங்களில் தாக்குதல், வெடிகுண்டு வீச்சு சம்பவங்களும் நிகழ்த்தப்பட்டன. இதுகுறித்த புகார்கள் கண்டுகொள்ளப்படவில்லை. இப்படி ஏராளமான வன்முறைகளை நிகழ்த்தி பொதுமக்களின் ரத்தத்தால் பெறப்பட்ட ரசிக்கமுடியாத வெற்றி இது என அவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.