ஆப்கானிஸ்தானின் 60 சதவிகித நிலப்பரப்பை தலிபான்கள் தற்போது கட்டுப்படுத்துகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மிக வேகமாக முன்னேறி வருகின்றனர். 30 நாட்களில் தலைநகர் காபூலை அவர்கள் தனிமைப்படுத்திவிடுவார்கள். 90 நாட்களில் கபூலை அவர்கள் கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் திருமணம் செய்வதற்கு எனகூறி, அங்குள்ள 12 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் வலுக்கட்டாயமாக கடத்தி செல்கின்றனர் தலிபான்கள் என குற்றம் சாட்டப்படுகிறது.