ஸ்டாலினின் கரிசனம் உண்மையா?

சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதற்கு பதில் அளித்து பேசினார். அப்போது மாணவர்களுக்கு அளிக்கும் புத்தக பையில் முந்தைய முதலமைச்சர்கள் புகைப்படம் இருந்து விட்டு போகட்டும், அதை மாற்ற ரூ.13 கோடி செலவு செய்ய வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார் என தெரிவித்தார். ஆனால் இது ஒன்றும் ஸ்டாலினின் புதிய முயற்சியோ அல்லது பணத்தை சேமிக்கும் நடவடிக்கையோ அல்ல. இதற்கு ஏற்கனவே முன்னுதாரணமாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் உள்ளார். கடந்த 2017ல் உ.பி முதல்வராக யோகி பதவியேற்ற போது, அம்மாநிலத்தில் பள்ளி குழந்தைகளுக்காக கொடுக்கப்பட இருந்த 35 ஆயிரம் புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் புகைப்படம் இருந்தது. அதனை மாற்ற வேண்டாம், அந்த பையையே மாணவர்களுக்கு அளிக்கலாம் என்று யோகி தெரிவித்திருந்தார். புகைப்படத்தை நீக்க அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்படும் என்பதே இதற்கு காரணம். எனவே, ஸ்டாலினின் இந்த கரிசனமும் தி.மு.கவின் மற்றொரு ஸ்டிக்கர் ஒட்டும் முயற்சியைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. அடுத்ததாக, அரசு ஏற்கனவே கடும் நிதிச்சுமையில் உள்ள நிலையில் கருணாநிதிக்கு அரசு வரிப்பணத்தில் 35 கோடியை செலவழித்து நினைவு மண்டபம் எழுப்பும் ஸ்டாலின் 13 கோடிக்காக வருத்தப்படுவாரா என்ன? அப்படி கட்டித்தான் ஆகவேண்டும் என்றால், அவர்களின் மாபெரும் பணக்கார குடும்பத்தினர் தங்கள் சொந்த நிதியில் இருந்தே கருணாநிதியின் நினைவு மண்டபம் கட்ட நிதியளிக்கலாமே? என மக்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.