தமிழக பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில், தமிழகத்தின் வாகனம், பங்குபெற தகுதி அடிப்படையில் தேர்வு பெறாத செய்தியை, தவறாக சித்தரிப்பதை கண்டித்துள்ளார். மேலும், ‘மகாகவி சுப்ரமணிய பாரதி தலை சிறந்த தேசியவாதி. ஆன்மீகப் பற்று மிக்கவர். அவர் கனவு கண்டது அகண்ட பாரதம். இந்த ஒவ்வாமையால் தான் பாரதியை விட பாரதிதாசனை அதிகம் கொண்டாடினார் ஸ்டாலின். பாரதியார், தி.மு.க கடைபிடித்துவரும் இனவாதம், மதவாதம், தேசிய எதிர்ப்பு, மொழிப் பிரிவினை, ஊழல் போன்ற கொள்கைகளுக்கு எதிரானவர் பாரதி. வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரம், குயிலியின் தியாகம் போன்றவை, எந்த ஒரு சமூகப் பிரிவைச் சேர்ந்தவரும் தலைமைக்கு வரமுடியும் என்பதை காட்டுகிறது. நீங்கள் மரபுரிமையாக அனுபவிக்கும் தலைமைப் பொறுப்பை அடைய ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் நிரூபித்தனர். வ.உ.சிதம்பரம் பிள்ளை, தீவிர தேசப்பற்று மிக்கவர். அவரும் தனி மாநிலம் பற்றி பேசவில்லை. நாட்டிற்காக கடுமையான தண்டனைகளை அனுபவித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடமிருந்து அவர் பெற்ற அவருடைய ஆன்மீகத்தையும் தெய்வீகத்தையும் மறைக்க முடியுமா? தி.மு.க ஆட்சி தொடங்கியது முதல், பள்ளி பிள்ளைகளுக்கு உள்நோக்கத்துடன் வடிகட்டிய வரலாற்றையே கொடுத்துள்ளது. மனோன்மணியம் பெ. சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய வாழ்த்துப் பாடலில், பல்லுயிரும் பலவுலகும் படைத்துளித்துத் துடைக்கினுமோர்… போன்ற உயிரோட்டமான வரிகளை நீக்கிவிட்டு, அவர்களுக்குத் தோதான வரிகளை மட்டுமே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக மாற்றினர்’ என சாடியுள்ளார். இறுதியாக, ‘ஜனவரி 26 நம் நாட்டின் குடியரசு தினமே தவிர நமது சுந்திர தினம் அல்ல’ என்று ஸ்டாலினின் மேதாவிதனத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.