எதற்கு என்றே தெரியாமல் சட்டைப் பையில் 3 கலர் பேனாக்கள், கைகளில் 2 வாட்ச் என அனைவரிலும் வித்தியாசமாக தெரிபவர் நமது தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இதனால், அவர் சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுவதும் கிண்டல் செய்யப்படுவதும் வழக்கம். இந்நிலையில், நேற்று காலை 6 மணிக்கு தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த பழனிவேல் தியாகராஜன் இரண்டு லேப்டாப்களை எடுத்து வந்ததால் மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அங்கும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் தியகராஜன். இரண்டு லேப்டாப்களை எடுத்துச் செல்லக் கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் பயணிகளுக்கு இல்லை என சட்டம் பேசினார். இதனை அறிந்து அங்குவந்த மூத்த அதிகாரிகள் தியாகராஜனிடம் மன்னிப்பு கேட்டு 2 லேப்டாப்களுடன் அவரை வழியனுப்பி வைத்தனர்.