கர்நாடக மாநிலத்தில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தில் ரிஷி திவாரி என்ற ஹிந்து மாணவர், 2020ம் ஆண்டு எம்.ஏ டெவலப்மென்ட் பிரிவில் முதுகலை மாணவராக சேர்ந்தார். அவர் பல்கலைக் கழகத்தில் சேர்ந்ததில் இருந்து அக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களால் பல்வேறு வகையில் பாகுபாட்டை எதிர்கொண்டு வந்துள்ளார். காரணம், அவர் ஒரு ஹிந்து மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) என்ற மாணவர் அமைப்புடன் தொடர்பில் இருப்பவர். இந்த காரணத்திற்காக அங்குள்ள முஸ்லிம் மாணவர்களால் பலமுறை அவர் திட்டமிட்டே அவமானப்படுத்தினர். அவரை பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேற்றுவதற்காக, அங்கு பயிலும் முஸ்லிம் மாணவர்கள் குழுவினர், தாங்கள் நோன்பு திறக்கும் போது திவாரி எங்கள் மீது உணவை வீசினார், உடல்ரீதியாக தாக்கினார் என அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இடதுசாரி கருத்தியல் கொண்ட சில மாணவர்களும் பேராசிரியர்களும் இதற்கு துணை போனார்கள், ரிஷியை பல்கலைக் கழகத்தை விட்டு நீக்க வேண்டும் என போராட்டம் நடத்தி, கல்லூரி இயக்குனரிடம் புகார் மனு அளித்தனர். அதன் பிறகு, ரிஷி திவாரி தரப்பின் நியாயத்தைக் கூட கேட்காமல் பல்கலைக் கழக நிர்வாகம் அவரை இடைநீக்கம் செய்தது. ஆனால், ரிஷியின் கூற்றுப்படி, உண்மையில் மே 1 அன்று, முஸ்லிம் மாணவர்களின் சில குழுக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்தனர் பின்னர் உடல் ரீதியாகவும் தாக்கி துன்புறுத்தியுள்ளனர் என கூறப்படுகிறது.