தமிழகத்தில், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணிகளில் 1,089 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த நவம்பர் 6ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் பிப்ரவரி 15-ம் தேதி வெளியாகின. தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், இத்தேர்வில் காரைக்குடியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் என்பதால் இது பலத்த சந்தேகத்தையும் சர்ச்சையையும் எழுப்பியுள்ளது. இதுதவிர, சமீபத்தில் வெளியான குரூப் 4 முடிவுகளிலும், தென்காசியை சேர்ந்த ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்த 2 ஆயிரம் பேர் வரை தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரமும் சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஹிந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மதம் மாற்றும் ‘லவ் ஜிஹாத்’, ஹிந்துக்கள் உட்பட மற்ற மதத்தினரின் நிலங்களை மிரட்டி, ஏமாற்றிப் பறிக்கும் ‘நில ஜிஹாத்’ போன்ற பல்வேறு வகையான ஜிஹாத்துகள் வரிசையில் அரசு வேலைகளில் அதிக எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் நுழைந்து அதிகாரத்தை கைப்பற்றி அரசை ஆட்டிவைக்கும் ‘அரசு வேலை ஜிஹாத்’ தேசமெங்கும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஏற்கெனவே 2019ல் நடைபெற்ற குரூப் 4 தேர்வில், கீழக்கரை, ராமநாதபுரம் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வு முறைகேடுகள் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவு கூரத்தக்கது. இதையடுத்து, தேர்வெழுத ஆதார் கட்டாயம், தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு மாற்றங்களை டி.என்.பி.எஸ்.சி கொண்டுவந்தது. எனினும், மீண்டும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் தொடர்பாக இதேபோன்றதொரு சர்ச்சை தற்போது மீண்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நில அளவர் தேர்வில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர்களில் பலர் காரைக்குடியில் உள்ள தனியார் மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். மொத்த பணியிடங்களில் 70 சதவீத இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்த டி.என்.பி.எஸ்.சி முன்வர வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார். ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் அதிகம் தேர்ச்சி அடைந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.