மிரட்டப்படும் பா.ஜ.க பொறுப்பாளர்கள்

மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய, பா.ஜ.க பொதுச் செயலாளரும், மேற்கு வங்க பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியா, ‘நம் நாட்டில் கத்தி முனையை பயன்படுத்தியே, இஸ்லாம் பரவியது. இப்போது, மேற்கு வங்கத்திலும் அதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. அங்கு, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு, கத்தி முனையில் மிரட்டி அவர்கள் திருணமூல் காங்கிரசில் சேர்க்கின்றனர். யாரும் விரும்பி அதில் சேரவில்லை. மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. மேற்கு வங்க பா.ஜ.க பொறுப்பாளரான என் மீது மட்டும் திரிணமூல் அரசு 20க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது. அங்கு சர்வாதிகாரியாக மமதா செயல்படுகிறார். பாரதத்தின் ஜனநாயகத்தை உலகம் பாராட்டுகிறது. ஆனால், அவருக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை’ என கூறினார்.