ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தனது முதல் வணிக நோக்கிலான சிவில் விண்வெளி பயணத்தை இந்த ஆண்டு இறுதியில் செயப்லடுத்த உள்ளது. ‘இன்ஸ்பிரேஷன் 4’ என அழைக்கப்படும் இந்த திட்டத்தில் நான்கு பேர் பயணிக்க உள்ளனர். ‘ஷிப்ட் 4’ நிறுவன தலைமை அதிகாரி ஜாரெட் ஐசக்மேன் பயணிக்க உள்ளார். அவருடன் மேலும் மூன்று அமெரிக்க பொதுமக்களும் பயணிக்க உள்ளனர். அவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும். குழந்தைகள் மருத்துவ ஆராய்ச்சி மருத்துவமனைக்கு நிதியளித்தல், மற்றவர்களுக்கு தூண்டுதலாக அமையும் தங்கள் வணிக வெற்றி குறித்து கூறுதல் உள்ளிட்ட பயணிக்க விரும்பும் பொதுமக்களுக்கான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.