கூகுளுக்கு எதிராக விசாரணை

பாரதத்தில், வர்த்தகப் போட்டி நடைமுறைகளுக்கு எதிராக ‘ஸ்மார்ட் டிவி’ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கூகுள் சந்தைப்படுத்துகிறது என்று எழுந்த புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த இந்திய தொழில் போட்டி ஆணையம் (சி.சி.ஐ) உத்தரவிட்டுள்ளது. தொலைக்காட்சி செயலி வினியோக ஒப்பந்தத்தின்படி, கூகுளின் அனைத்து அப்ளிகேஷன்களையும் நிறுவ வேண்டும் என ஸ்மார்ட் டி.வி உற்பத்தியாளர்களை நிர்பந்திக்கிறது கூகுள். மேலும், பிளே ஸ்டோரிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதுபோன்ற கூகுளின் செயல்பாடுகள் இந்திய போட்டி நடைமுறைச் சட்டத்திற்கு எதிரானது என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறை சட்டங்களுக்கு உட்பட்டே நாங்கள் நடக்கிறோம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.