மருத்துவ தாவரங்களுக்கு இடுபொருள்

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம், மருத்துவ தாவரங்களின் வர்த்தகம், ஏற்றுமதி, பாதுகாப்பு, விளைச்சலுக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துகிறது. தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள மருத்துவ தாவரங்களுக்கான தரமான இடுபொருட்கள் உருவாக்கத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஹிமாலயன் உயிரி ஆதார தொழில்நுட்ப நிறுவனத்துடன் தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் (என்.எம்.பி.பி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மிக உயரமான இடங்களில் வளரும் அரிய வகை தாவரங்களும் இதில் அடங்கும்.