தொழில்துறையினர் வேண்டுகோள்

தொழில்துறைக்கு முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டாம் என்று தொழில் துறையினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 90 சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அரசு தொழிற்சாலைகளை இயக்க அனுமக்கவில்லையெனில் அனைத்துத் தொழிலாளர்களும் கடும் சிரமத்துக்குள்ளாவர். வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் இடம்பெயரும் நிலை ஏற்படும். உற்பத்தி பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே மூலப் பொருட்கள் விலை உயர்ந்து பாதிப்பு ஏற்படுத்தியுள்ள சூழலில், மூன்றாம் அலையின்போது தொழில்துறை முடக்கப்படுவது தொழில்துறை, தொழிலளர்கள், தேசம், மாநிலம் என அனைத்தையும் பாதிக்கும்.  தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பது கடந்த காலங்களைப் போல தொடர வேண்டும். அரசு தெரிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை தொழில்துறையினர் பின்பற்றுவார்கள் என தெரிவித்து உள்ளனர்.