ஆர்.எஸ்.எஸ்சின் துணை அமைப்பான சுதேசி ஜாக்ரன் மன்ச் ‘ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியின் உள்நாட்டு உற்பத்திக்கு விரைவில் அனுமதி வழங்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் தயாரிப்பு தொழில்நுட்பத்தை மற்ற மருந்து நிறுவனங்களுடன் பகிர்ந்துகொண்டு அவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்து மக்களுக்கு உதவ வேண்டும். ரெம்டெசிவர், ஃபவிராப்வீர் ஆகியவை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதிகரித்து வரும் கொரோனா பிரச்சினையின் தீவிரத்தால் தேவையை பூர்த்தி செய்யம் அளவுக்கு கிடைப்பதில்லை. எனவே அதன் உற்பத்தியை அதிகரிக்க ஆவன செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் அஸ்வனி மகாஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.