இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா என்பது உலகெங்கிலும் உள்ள மாணவர்கள், பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் கலைஞர்களை ஒன்றிணைக்கும் நாட்டின் மிகப்பெரிய வருடாந்திர நிகழ்வாகும். புவி அறிவியல் அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், விஞ்ஞான பாரதி ஆகியவை இணைந்து இத்திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தன. கோவாவின் பனாஜியில் நடைபெற்ற இவ்விழாவில், மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கலந்துகொண்டார். சமீபத்தில் மறைந்த ஜெனரல் பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு பல்வேறு அரங்குகளை பார்வையிட்ட அமைச்சர், மாணவர்களுடன் கலந்துரையாடினார். கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த், மத்திய இணை அமைச்சர்கள் டாக்டர் ஜிதேந்திர சிங், ஸ்ரீபத் நாயக் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.