‘பாரதம் ஸ்வீடன் பசுமை மாற்றத்தை துரிதப்படுத்துதல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற எட்டாவது பாரத ஸ்வீடன் புத்தாக்க தினக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ‘புதைபடிவ எரிபொருள் இல்லாத பொருளாதாரம் என்ற இறுதி இலக்கை அடைவதில் எரிசக்தி துறையில் பாரத ஸ்வீடன் ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றும். தூய்மையான எரிசக்திக்கான தொழில்நுட்ப தீர்வுகளை பாரதம் தேடுகிறது. 2018ல் பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்டாக்ஹோம் பயணத்தின் போது எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு ஒரு முக்கிய பகுதியாக அடையாளம் காணப்பட்டது. பொருட்களின் இணையம், இயந்திர கற்றல், சுழற்சி பொருளாதாரம் ஆகியவற்றில் பாரதத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் ஸ்வீடிஷ் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க அமைச்சகம் இணைந்து செயல்படுகின்றன. இருதரப்பு உறவுகளின் முக்கிய அங்கமாக அறிவியல், தொழில்நுட்ப துறை விளங்குகிறது’ என கூறினார்.