பெருகும் ஆதரவு

அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க கூட்டணிக்கு 13 சிறிய கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் தமிழ் மாநில முஸ்லிம் லீக், மனித உரிமை காக்கும் கட்சி, புதிய நீதிக்கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம், பசும்பொன் தேசிய கழகம், பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, இந்தியத் தேசிய குடியரசு கட்சி, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம், தமிழக ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி, செங்குந்தர் அரசியல் அதிகாரம், இந்து மக்கள் கட்சி ஆகிய 13 கட்சிகளின் தலைவர்கள் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்களைச் சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.