மத்திய அரசின் பல்வேறு சீரிய முயற்சிகளால் கடந்த ஏழு ஆண்டுகளில் பாரதத்தில் நிறுவப்பட்ட மின் திறன் 1,55,377 மெகாவாட்டாக அதிகரித்து உள்ளதாக மத்திய மின் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2008ல் பாரதத்தின் மின் பற்றாக்குறை 16.6 சதவீதமகவும் 2012ல் 10.6 சதவீதமாகவும் இருந்த்து. ஆனால், தற்போது மின் பற்றாக்குறை என்பது 0.4 சதவீதமாக குறைந்துவிட்டது. அது இந்த அக்டோபர் மாதம் – 1.2 ஆக உள்ளது. அதாவது, தேவையைவிட அதிகமாகவே மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க தீன் தயாள் உபாத்யாயா கிராம ஜோதி யோஜனா, ஒருங்கிணைந்த ஆற்றல் மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி அனைத்து வீடுகளுக்கும் மின் வசதி (சௌபாக்யா) போன்ற பல்வேறு மத்திய அரசு திட்டங்களால் ‘மின்வசதி செய்யவே முடியாது’ என கூறப்பட்ட தேசத்தின் கடைகோடி கிராமங்களுக்கும், மலைப்பகுதி கிராமங்களுக்கும் தற்போது மின்வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.