சட்டவிரோத வங்க தேசத்தவர் கைது

சட்டவிரோதமாக அசாமில் நுழைந்த 4 பெண்கள், 6 ஆண்கள் கொண்ட 10 வங்க தேச கும்பல் அசாம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அசாமின் பதர்பூரில் இருந்து சென்னைக்கு ரயில் ஏற இருந்த சூழலில் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் இவர்களுக்கு சென்னை ஹோட்டல்களில் வேலை கிடைத்துள்ளதாகவும் ஏற்கனவே தென்னிந்தியாவில் வேலை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளனர். வேலை உறுதி என்று தெரியாமல் யாரும் தேசம் விட்டு தேசம் வர மாட்டார்கள். முதலில் சென்னை போவோம், பிறகு வேலை தேடுவோம் என்று இவர்கள் நினைத்திருக்க வாப்பில்லை.

அப்படியெனில் இவர்களுக்கு வேலை அளித்த ஹோட்டல்கள் எவை, வேலை ஏற்பாடு செய்பவர்கள் யார், இவற்றிறு எல்லாம் பின்புலமாக இருப்பவர்கள் யார், அவர்களுக்கு துணைபோகும் அரசியல் சக்திகள் எவை? என்ற கேள்விகளும் இதன்மூலம் எழுந்துள்ளன. இது ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வருவது போன்ற நிகழ்வு அல்ல. இவர்களைபோல ஆயிரக்கணக்கானோர் தென்னிந்தியா முழுவதும் வேலை செய்கிறார்கள். இவர்களால் மன்னின் மைந்தர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. இது நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தானது.

ஏற்கனவே திருப்பூர், கோவை உட்படபல இடங்களில் பலமுறை சட்டவிரோத வங்க தேச குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுபான்மையினர் என்ற ஒரே காரணத்துக்காக முஸ்லிம் கிறிஸ்தவர்களிடம் பணிந்துபோகும் தி.மு.க தலைமையிலான ஆட்சி இந்த விஷயத்திலாவது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லையெனில், மத்திய அரசும் நீதிமன்றமும் இதில் தலையிட்டு தேச பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.