தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அண்மையில் தமிழகத்தில் தி.மு.க அரசு திட்டமிட்டு நடத்தவிருந்த மின்சாரத்துறை ஊழல், ஸ்வீட் கொள்முதல் ஊழல் போன்ற பலவற்றை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். மின்சாரத்துறை ஊழல் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதாரம் கேட்க அதற்கு ரூ. 29 கோடி பண விடுவிப்பு ஆதாரமும் அளித்தார். கூடவே இலவச இணைப்பாக, அவரின் வீட்டில் அமர்ந்துள்ள 5 பேர், 4 சதவீத கமிஷன் விவகாரங்கள், செந்தில் பாலாஜி குறித்து ஸ்டாலின் பேசியது உள்ளிட்டவைகளும் வெளியாகின. இவ்விவகாரம் மக்களிடம் தி.மு.க திட்டமிட்டு பரப்பிய நல்லாட்சி என்ற பொய் பிம்பத்தை உடைத்தது. இந்நிலையில், பி.ஜி.ஆர்.நிறுவனம், அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் கருத்துத் தெரிவித்ததாகக் கூறி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம், ரூ. 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள அண்ணாமலை, ‘சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான். தி.மு.க., அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை. நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது. சந்திப்போம்’ என பதிவிட்டுள்ளார்.