இலங்கையில் உள்ள புலம் பெயர்ந்த பாரத வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்க உண்மையாகவே பாடுபடும் நமது மத்திய அரசு, அவர்களுக்காக வீடுகளை கட்டித் தந்து வருகிறது. இதுவரை 46 ஆயிரம் வீடுகள் புதிதாக கட்டப்பட்டோ மறுசீரமைக்கப்பட்டோ பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் 3ம் கட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஆயிரம் வீடுகள் பாரத வம்சாவளி பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இலங்கைக்கான பாரதத் தூதர் கோபால் பாக்லே, இலங்கை அமைச்சர்கள் நமல் ராஜபட்சே, ஜீவன் தொண்டைமான் உள்ளிட்டோர் பங்கேற்று பயனாளிகளுக்கு வீட்டுக்கான சாவிகளை ஒப்படைத்தனர். இத்திட்டத்தின் அடுத்தக் கட்டத்தில் 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. மொத்தம் 60 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைத் தமிழருக்காக பாடுபடுவதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் திராவிட கட்சிகளும் காங்கிரஸ் கட்சியும் அவர்களுக்கு உண்மையில் எந்த நல்லதையும் இதுவரை செய்ததில்லை என்பதுதான் நிதர்சனம்.