எஸ்.டி.பி.ஐ தலைவரின் ஓட்டல் இடிப்பு

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நசீர் அகமது மற்றும் அவரது சகோதரர் பஷீர் அகமது ஆகியோர், ஜாமியா மசூதிக்கு சொந்தமான சுமார் 250 சதுர அடி பரப்பளவில் ஒரு பழைய பொருட்கள் கடையை நடத்தி வந்தனர். பின்னர், அவர்கள் அதனை புதுப்பித்து, உள்ளாட்சி அமைப்பின் எவ்வித அனுமதியுமின்றி சுமார் 1,800 சதுர அடி பரப்பளவில் ஜரா ஃபேமிலி உணவகம் என்ற உணவகத்தை நிறுவினர். அந்த கட்டடத்திற்கு கட்டட உரிமம் இல்லை, ஹோட்டல் நடத்துவதற்கான உரிமமும் இல்லை. இதையடுத்து 2018ம் ஆண்டில் இந்த சட்டவிரோத கட்டிடத்தை இடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டது. ஆனால், அதன் உரிமையாளர்கள் அதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றனர். இந்த தடை உத்தரவு சமீபத்தில் நீக்கப்பட்டது. அதனையடுத்து, நகராட்சி நிர்வாகம், காவல்துறை உதவியுடன் அக்கட்டடத்தை இடித்தது. இது பழிவாங்கல் நடவடிக்கை என நசீர் அகமது புலம்பியுள்ளார். சமீபத்தில், பிரபல தீவிரவாத இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாணவர் பிரிவான கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (சி.எப்.ஐ), தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் ஆகியவை கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையை ஏற்பாடு செய்ய முஸ்லீம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.