யோகா பாட்டிக்கு கௌரவம்

பாரதத்தின் முதுமையான யோகா ஆசிரியரான  கோவையை சேர்ந்த யோகா பாட்டி நாணம்மாள், 45 ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்களை உருவாக்கியுள்ளார். இவரிடம் படித்த, 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது யோகா ஆசிரியர்களாக உள்ளனர். 2016ல், மத்திய அரசின் ‘நாரி சக்தி புரஸ்கார்’ விருதும், 2018ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். கடந்த 2019ல் காலமானார். தற்போது சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்தில், பிளஸ் 1 உடற்கல்வி குறித்த பாடப்புத்தகத்தில், யோகா பாட்டி நாணம்மாள் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. தமிழக அரசின் பாட புத்தகங்களில், ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்ற யுனெஸ்கோ விருது பெற்ற ஈ.வே. ராமசாமி நாயக்கர்’ போன்ற தவறான தகவல்களை தமிழக கல்வித்துறை வழங்கி வரும் நிலையில், இதுபோன்ற முயற்சிகள் உண்மையில் பாராட்டத்தக்கவை.