ஹுனார் ஹாத்

உத்தரப்பிரதேசத்தின் ராம்பூரில் 29வது ‘ஹுனார் ஹாத்’ கண்காட்சி துவக்கிவைக்கப்பட்டது. ஹூனார் ஹாத் என்பது, நமது தேசத்தில் உள்ள சிறுபான்மையின மக்களின் கைவினை பொருட்களை ஊக்குவிக்க, வாழ்வாதாரத்தை பெருக்க மத்திய அரசு எடுத்துவரும் ஒரு முயற்சி. ஹூனார் ஹாத் மூலம் அவர்களின் பொருட்களை உள்ளூர் மட்டுமல்ல உலக சந்தையிலும் விற்க முடியும். இதில் கலந்துகொண்ட அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், ‘விஸ்வகர்மா, ஹுனார் ஹாத் போன்ற முன்முயற்சிகள் கிராமத்தில் உள்ள திறமையானவர்களுக்கு ஒரு நம்பகமான அடித்தளம் கிடைத்துள்ளது, அரசின் புதிய கல்விக் கொள்கை, கல்வி மற்றும் திறன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது, இது மோடியின் தற்சார்பு இந்தியா, உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கம் போன்ற பிரச்சாரங்களை வலுப்படுத்தும், கைவினைஞர்களின் குழந்தைகளுக்கு கல்வி, திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்க மத்திய கல்வி அமைச்சகமும் சிறுபான்மை விவகார அமைச்சகமும் இணைந்து செயல்படும் என கூறினார். ஹுனார் ஹாத் மூலம் 7 ​​லட்சத்து 50 ஆயிரம் கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று முக்தர் அப்பாஸ் நக்வி பேசினார்.