குறி வைக்கப்படும் ஹிந்து கோயில்கள்

தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன், சுடலை ஆண்டவர் கோயில்கள் பல ஆண்டுகளாக வழிபாட்டில் இருந்தது. துாத்துக்குடி மாநகராட்சியில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி மாநகராட்சியினர் காவல்துறையின் பாதுகாப்புடன் அக்கோயில்களை இடித்துத் தள்ளினர். ஏற்கனவே இக்கோயில்களை இடிக்கக்கூடாது என பா.ஜ.கவினர், ஹிந்துமுன்னணியினர் உள்ளிட்ட பல ஹிந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அவற்றை காதில் வாங்கிக்கொள்ளாமல் தி.மு.க தலைமையிலான தமிழக அரசு ஹிந்து வழிபாட்டுத்தலங்களை இடிப்பதில் மட்டுமே மும்முரம் காட்டுகிறது. துாத்துக்குடியில் ஆக்கிரமிப்பில் இருப்பதாக மாநகராட்சி அளவீடு செய்த இடங்களில் முறைகேடாக பல ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆனால் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஹிந்து கோயில்கள் மட்டும் குறிவைக்கப்படுகின்றன என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.