இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக மஹாராஷ்டிரா, டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. டில்லியில் 6 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏராளமான மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். ஏழைகளும் தங்கள் வேலைகளுக்கு செல்ல முடியாமல், வருமானமின்றி தவிக்கின்றனர். புலம் பெயர் தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில், பஸ் நிலையங்களில் காத்து கிடக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், உடை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல ஹிந்து அமைப்புகள் வழங்கி வருகின்றன. மும்பை, இந்தூரில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 10 ஆயிரம் லிட்டர் குடிநீர், நகரும் கழிப்பறை வசதிகள், இந்தூரில் உள்ள ராதா சாமி சத்சங் வளாகத்தில் செயல்படும் கொரோனா சிகிச்சை மையம் போன்றவற்றை இந்த அமைப்புகள் ஏற்படுத்தித்தந்து வருகின்றன.