பாகிஸ்தானில் ஹிந்து கோயில்கள்

பாகிஸ்தான், தெரி கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோயில், ‘ஜமாத் உலேமா இ இஸ்லாம்’ அமைப்பினரால் இடித்து தள்ளப்பட்டது. இந்த வழக்கில், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், ‘ஹிந்துக்கள் வழிபட்டு வந்த பாரம்பரிய கோயில்கள், சீக்கிய குருத்துவாராக்கள், தற்போது மோசமான நிலையில் உள்ளன. பிரசித்தி பெற்ற நான்கு இடங்களில், இரண்டு மிகவும் சிதிலமடைந்துள்ளது. உடனடியாக, தெரி மந்திர், கடாஸ் ராஜ் கோயில், பிரஹலாத் மந்திர், ஹிங்லஜ் மந்திர் போன்றவை சீரமைக்கப்பட வேண்டும். ஹிந்து, சீக்கியர் உள்ளிட்ட சிறுபான்மையினர், வழிபாட்டு தலங்கள் அருகே வசித்து, பல்வேறு காரணங்களால் வெளியேறியுள்ளனர். அப்பகுதிகளில், வழிபாட்டு தலங்களை பராமரிக்கும் பொறுப்பு, இ.டி.பி.பி அமைப்பிற்கு உள்ளது’ என கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, 365 கோவில்களில், 13 மட்டுமே, தான் நிர்வகிப்பதாகவும், 65 கோயில்களை ஹிந்துக்களே நிர்வகிப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த அமைப்பு, கோயில்களை பராமரிக்காமல், நில மாபியாக்களுக்கு தாரை வார்த்துள்ளது.