ஹிந்து ராஷ்ட்டிரம் எனும் விடியல் தோன்றுவதற்கு, ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதை நோக்கி தங்கள் செயலை முன்னெடுக்க வேண்டும். அனைத்து ஹிந்துக்களும் நமது சகோதரர்கள் என்பதை உணர வேண்டும். ஹிந்துக்கள் தங்களுக்குள் உள்ள வித்தியாசங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து ஒற்றுமையாக இருக்கும்போதுதான் இது சாத்தியமாகும். தேசத்தின் பாதுகாப்பை ஒரு தேசியவாத அமைப்பாக முன்னெடுக்க வேண்டும் என்ற கொள்கைகளின் அடிப்படையில் இதற்காக பாடுபடும் அமைப்புகளில் ஒன்று ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி.
பாரதம் எந்த தளத்திலும் தவறாக சித்தரிக்கப்படவில்லை, நமது தேசிய சின்னங்கள் இழிவுபடுத்தப்படவில்லை, நமது வரலாறு சிதைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதிலும் இந்த அமைப்பு உறுதியாக உள்ளது. திரைப்படங்கள், விளம்பரங்கள், ஹிந்து பண்டிகைகளில் மர்றவர்களால் அதிகரித்து வரும் முறைகேடுகள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு துறைகளில் அதிகரித்து வரும் ஹிந்து போபியாவுக்கு எதிராக பல பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளது ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி.
கங்கை நதியை தூய்மைப்படுத்தவும், புத்துயிர் பெறவும் பல அமைப்புகளுடன் இணைந்து பிரச்சாரம் செய்து வருகிறது. கங்கையின் ஆன்மீகம், வரலாறு, மதம், பொருளாதார முக்கியத்துவம் பற்றிய பல புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது. ஹிந்து ஜஞ்சகிருதி சமிதி, ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்துவதற்கு எதிரான ‘ஹிந்து ராஷ்ட்ர சங்கல்ப் அபியான்’ பிரச்சாரத்தையும் முன்னின்று நடத்துகிறது. இந்த வெற்றிகரமான பிரச்சாரங்கள் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள், ஹிந்து தர்மத்திற்காக துணை நிற்க ஆரம்பித்து உள்ளனர்.
பாரதத்தில் உள்ள சில அமைப்புகளும் சில சர்வதேச நிறுவனங்களும் எவ்வாறு ஹிந்துக்களின் தெய்வங்கள், ஹிந்து பழக்கவழக்கங்கள், கலாச்சாரத்தை இழிவுபடுத்துகின்றன என்பதை ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி மக்களுக்கு புரியவைத்ததன் விளைவாக பல அமைப்புகளால் அவற்றின் பொய் பிரச்சாரங்கள் திரும்பப் பெறப்பட்டது. ஹிந்து ஜனஜாகிருதி சமிதி துவக்கப்பட்ட தனது 20 வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில் அதன் பணி சிறக்க வாழ்த்துவோம்.