ம.பி’யில் ஹிஜாப் பிரச்சனை

மத்தியப் பிரதேசத்தின் டாக்டர் ஹரிசிங் கௌர் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு முஸ்லிம் மாணவி ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்குள் நமாஸ் செய்யும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹிந்து ஆர்வலர் குழுவான ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் அளித்த புகாரின் பேரில் பல்கலைக்கழகம் இப்போது இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஐந்து பேர் குழு ஒன்றை அமைத்துள்ளது. மேலும், பல்கலைக்கழக வேந்தர் நீலிமா குப்தா, ‘மாணவர்கள் தங்களது அனைத்து மத வழிபாடுகளையும் வீட்டிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். பல்கலைக் கழகம் படிப்பதற்காக மட்டுமே. பல்கலைக்கழக வளாகத்தில் ஆடைக் குறியீடு இல்லை. ஆனால் மாணவர்கள் அடிப்படை நெறிமுறைகளின்படி ஆடை அணிந்து வகுப்புகளுக்கு வர வேண்டும்’ என தெரிவித்துள்ளார். ஹிந்து ஜாக்ரன் மஞ்சின் சாகர் பிரிவு தலைவர் உமேஷ் சரஃப், ‘இந்த வீடியோவில் உள்ள சிறுமி நீண்ட காலமாக ஹிஜாப் அணிந்து விரிவுரைகளில் கலந்து கொள்கிறார். கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற மதச் செயல்களை அனுமதிக்கக் கூடாது. கல்வி நிறுவனங்கள் அனைத்து மதத்தினருக்கும் இடமாக இருப்பதால் இது ஆட்சேபனைக்குரியது’ என கூறினார்.