கேரளாவை ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிச அரசு, லோக் ஆயுக்தா சட்டத்தை நீர்த்துபோக வைக்கும் வகையில் லோக் ஆயுக்தா அவசர திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தது. முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் மீதான வழக்குகள் தற்போது லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதன் தீர்ப்பு வெளியானால் தங்களது பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் இந்த அவசர திருத்தச் சட்டத்தை பினராயி முன்மொழிந்துள்ளார் என பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில், சமூக சேவகர் ஆர்.எஸ். சசிகுமார் இதுகுறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மாநில அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் கோரியுள்ளது. வழக்கை மார்ச் 7ம் தேதி விசாரனைக்கு பட்டியலிட்டது.