தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ), கேரளாவில் சட்ட விரோதமாக நடத்திய கடையடைப்பு, வன்முறை போராட்டங்களால் ரூ.5.20 கோடி இழப்பு ஏற்பட்டதாக கேரள அரசு கூறியது.இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பி.எப்.ஐ அமைப்பு மற்றும் அதன் மாநில செயலாளர் அப்துல் சத்தாரை குற்றவாளியாக அறிவித்தது.பி.எப்.ஐ மற்றும் அப்துல் சத்தாரிடம் இருந்து 5.20 கோடியை நஷ்டஈடாக வசூலிக்கவும் கடந்த செப்டம்பர் 30 அன்று கேரள அரசுக்கு உத்தரவிட்டது.ஆனால், கேரள அரசு அந்த உத்தரவை இதுவரை நிறவேற்றவில்லை.இதையடுத்து, ரூ.5.2 கோடி இழப்பீடுகளை மீட்டெடுப்பதில் தேவையற்ற காலதாமதம் செய்ததற்காக கேரள அரசை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.இது தொடர்பான விசாரணைக்கு டிசம்பர் 23ம் தேதி நேரில் ஆஜராகுமாறு மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும், முந்தைய உத்தரவுகளுக்கு இணங்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஜனவரி 31க்கு மேல் நீட்டிக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தியது.