ஹனுமன் கோயில் கும்பாபிஷேகம்

திரைப்பட நடிகர் அர்ஜுன், சென்னை கெருகம்பாக்கத்தில் கட்டிவந்த ஹனுமன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று இனிதே நடைபெற்றது. இது அவருடைய பல வருட கனவு என பலமுறை அவர் கூறியுள்ளார். பலரையும் அழைத்து கும்பாபிஷேக விழாவை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், தற்போதுள்ள கொரோனா சூழலால் அவ்வாறு நடத்த முடியவில்லை என அவர் கூறினார்.