ஹனுமன் ஜெயந்தி கலவரம்

ஹனுமானின் பிறந்தநாளான ஹனுமன் ஜெயந்தி டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரியில் ஹிந்துக்கள் உற்சாகமாக கொண்டாடினர். இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஷோபா யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாத்திரையில் ஏராளமான குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்கள் கலந்துகொண்டனர். ஷோபா யாத்திரை மாலை 6 மணியளவில் ‘சி’ பிளாக் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கு முஸ்லிம்கள் திடீர் என ஊர்வலத்தின் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர். கல்வீசி தாக்கியதுடன் இரும்புக் கம்பிகள், தடிகளால் மக்களைத் தாக்கினர். துப்பாக்கியாலும் சுட்டனர். மேலும், முஸ்லிம் மதவெறி கும்பல் வாள்களை காட்டி ‘அல்லா ஹு அக்பர்’ என்று கூச்சலிட்டது. பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். இத்தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இது முன்கூட்டியே நன்றாக திட்டமிடப்பட்ட தாக்குதலாகவேத் தெரிகிறது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடகிழக்கு டெல்லியின் பா.ஜ.க எம்.பி மனோஜ் திவாரி கூறினார். இதனை அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி உயர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டு, வன்முறையை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார். முத்லவர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். வன்முறை சம்பவம் தொடர்பாக 10 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 14 கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத வங்க தேசத்தவர்கள் ஏராளமானோர் டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.