ஹெச். ராஜா குற்றச்சாட்டு

பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘தி.மு.க.விற்கு வாக்கு அளித்தவர்கள் எல்லாம், இப்போது ஏன் வாக்களித்தோம் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். சமீபத்திய மழை வெள்ள பாதிப்பை சரிசெய்ய முடியாத தி.மு.க அரசு, மக்களை திசை திருப்பும் நோக்கில், தன்னை விமர்சனம் செய்யும் எதிர்கட்சியினரை கைது செய்கிறது. இப்படிதான் மாரிதாசும் கைது செய்யப்பட்டுள்ளார். தி.மு.க. ஆட்சியில் 150க்கும் மேற்பட்ட ஹிந்து கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. இவை அத்தனையும் பட்டா நிலங்களில் இருந்தவை. தி.மு.க.வின் ஹிந்து விரோத ஆட்சியால் மக்கள் கோயில்களுக்கு செல்ல முடியவில்லை. திருச்செந்துார் சூரசம்ஹார விழாவில் பக்தர்களை பங்கேற்க விடாமல் தடியடி நடத்தி விரட்டினர். தி.மு.க. அரசு கோயில்களை கொள்ளையடிக்க திட்டமிட்டு அதற்கான வேலையை துவங்கியுள்ளது. அதில் ஒன்றுதான் கோவில் நகைகளை உருக்கும் நடவடிக்கை. பிரதமர் மோடி, பிபின் ராவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியவர்களை கைது செய்ய வேண்டும்’ என கூறினார்.