ஜி.எஸ்.டி வருவாய் வசூல்

ஜி.எஸ்.டி, 2022 ஜூலை மாதத்தில் மொத்தம் ரூ. 1,48,995 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி அறிமுகம் செய்யப்பட்டபின் 2வது முறையாக இந்தளவு அதிகபட்ச வருவாய் கிடைத்துள்ளது.கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,16,393 கோடியாக இருந்த நிலையில் 2022 ஜூலை மாத வருவாய்  அதைவிட 28 சதவீதம் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தை விட சென்ற மாதம் சரக்குகளின் இறக்குமதி மூலமான வருவாய் 48 சதவீதமும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலமான வருவாய் (சேவைகளின் இறக்குமதி உள்பட) 22 சதவீதமும் அதிகமாக உள்ளது. அவ்வகையில், தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.6,302 கோடி ஜி.எஸ்.டி வசூலான நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 34 சதவீதம் அதிகரித்து, ரூ.8,449 கோடி வசூலாகியுள்ளது.புதுச்சேரியில் சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.129 கோடி ஜி.எஸ்.டி வசூலான நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 54 சதவீதம் அதிகரித்து, ரூ.198 கோடி வசூலாகியுள்ளது.