ஐ.எச்.எஸ் மார்க்கிட் சர்வே என்ற இங்கிலாந்தை சேந்த நிறுவனம் நடத்திய ஆய்வில், பாரதத்தின் உற்பத்தித் துறை சமீபத்திய மாதங்களில் ஜூலை மாதத்தில் வலுவான வளர்ச்சி விகிதத்தைக் கண்டுள்ளது. கொள்முதல் மேலாளர் குறியீடு (பி.எம்.ஐ) ஜூன் மாதத்தில் 48.1 ல் இருந்து ஜூலை மாதம் 55.3 ஆக உயர்ந்துள்ளது. கொள்முதல் மேலாளர்களின் குறியீடு (பி.எம்.ஐ) ஜூன் மாதத்தில் 48.1 ல் இருந்து ஜூலை மாதம் 55.3 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று குறைந்து வருமானால் 2021 ஆண்டிற்கான தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 9.7 சதவீதமாக இருக்கும். தொழிற்சாலை நடவடிக்கைகள் மீண்டு வருகிறது. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வணிகங்கள் உற்பத்தி நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. தேச வளர்ச்சியை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி அதன் ஆகஸ்ட் மாத கூட்டத்தில் வட்டி விகிதங்களை மாற்றாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.