புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தன் அறிக்கையில், ‘ஆட்சிக்கு வந்த 45 நாட்களில் ‘நீட்’ தேர்வு குறித்து குழு, மாநில நிதி ஆதாரம் குறித்து ஆராய குழு, கறுப்பு பூஞ்சை கண்டறிய குழு, கொரோனா குறித்து ஆராய குழு என, பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இது போதாது என முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்படுகிறது!!!’ என தி.மு.க அரசை கிண்டல் அடித்துள்ளார். மேலும், ‘பாரதப் பேரரசை முறையாக அடையாளப் படுத்தாமல் ஒன்றிய அரசு என தொடர்ந்து இழிவுபடுத்துவது தேச பக்தர்களிடம் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை பதிவேடுகளிலும் இனி இது இடம்பெற்று விடும். இது கவர்னர் கவனத்திற்கு வரவில்லையா என தெரியவில்லை’ என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.