கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில், 39 கோடி ரூபாய் செலவில் நினைவு மண்டபம் கட்ட தி.மு.க அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. மழை வெள்ளத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் தத்தளிக்கின்றன. சுரங்கப்பாதைகளும் சாலைகளும் குளங்களாக காட்சி அளிக்கின்றன. உண்ண உணவின்றி மக்கள் அலைகின்றனர். குடிக்க நல்ல குடிநீர் இல்லை. ஏரிகள் திறப்பால் எத்தனை உயிர்கள் காவு வாங்கப்படுமோ தெரியாது. கனமழை நீடிக்கும் என்ற வானிலை மையத்தின் மிரட்டல்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கம் மறுபுறம், தமிழகம் நீரில் மட்டுமல்ல கடனிலும் தத்தளிக்கிறது. பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டியில் கொண்டு வருவோம், எரிவாயு உருளைக்கு மானியம் பெண்களுக்கு உரிமைத் தொகை 1,000 ரூபாய் உள்ளிட்ட பல வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. ஆனால், இதை பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல், மக்களின் காசில் கருணாநிதிக்கு நினைவு மண்டபம்! “கிடப்தெல்லாம் கிடக்கட்டும் கிழவியை எடுத்து மனையில் வை” என்ற பழமொழி கிராமங்களில் உண்டு, அதனை மெய்ப்பிக்கிறது தி.மு.க இன்று.