திருநெல்வேலி பழையபேட்டை பகுதியில் உள்ள ஹிந்துக்கள் அங்கு ஐந்து தலைமுறைகளாக சுமார் 150 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அங்கு அவர்களுக்கு உரிமை உள்ள அந்த நிலத்திற்காக சொத்துவரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம் என அனைத்தையும் செலுத்தி பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வரும் அந்த பகுதியை தற்போது வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடம் எனக்கூறி முஸ்லீம்கள் அபகரிக்க முயற்சிக்கின்றனர். தமிழக அரசின் பத்திரப் பதிவுத் துறையும் மின்சார வாரியமும் அவர்களுக்கு துணைபோகும் வகையில், புதிய வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியாது, பத்திர பதிவு செய்யமுடியாது என கூறிவருகிறது. ஆனால், அவர்கள் கூறுவதற்கு எந்த ஆவணத்தையும் இதுவரை அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. இதனையடுத்து ஹிந்து முன்னணி இதற்காக போராட்டத்தில் ஈடுபட்டது. இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் கடிதங்கள் அனுப்பியுள்ளனர். தமிழக அரசு இப்பிரச்சனை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நெல்லை மாவட்ட மக்களை ஒன்று திரட்டி பெரிய அளவில் ஆர்பாட்டம் நடத்தப்படும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.