ஸ்ரீராம் வெங்கிடாராமன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியை சில நாட்களுக்கு முன்பு கேரள அரசு ஆலப்புழா மாவட்ட ஆட்சியராக நியமித்தது. அவரை மாற்ற வேண்டும் என்று அங்குள்ள முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஸ்ரீராம் வெங்கிடாராமனை அந்த பதவியில் இருந்து அகற்றிய கேரள அரசு, அவரை கேரள சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் பொது மேலாளராக நியமித்தது. போராட்டக்காரர்கள், ‘திருவனந்தபுரம் எம்.ஜி.சாலையில் 2019 ஆகஸ்டில் நடந்த குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய விபத்தில் கே.எம். பஷீர் என்ற ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டார். அவர், அகில இந்திய சன்னி ஜம்இய்யதுல் உலமாவின் ‘சிராஜ்’ பத்திரிகையில் பணியாற்றியவர். இந்த வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் ஒரு சக குற்றவாளி’ என குற்றம் சாட்டினர். ஆனால் அவ்வழக்கில், ஸ்ரீராம் முக்கிய குற்றவாளி இல்லை, அவர் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை, முக்கியமாக அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுக்குப்பிறகு ஸ்ரீராமுக்கு முக்கியமான நியமனங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும், ஸ்ரீராம், கடந்த 2017ம் ஆண்டு மூணாறு வனப்பகுதிகளில் தீவிர அடிப்படைவாத கிறிஸ்தவ அமைப்பினர் சட்டவிரோதமாக நட்ட பெரிய சிலுவைகள் போன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நேர்மையாக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தவர். இதனால் மக்களால் பாராட்டப்பட்டவர். ஆனால், கிறிஸ்தவ குழுக்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, முதல்வர் பினராயி விஜயன், அவரை அப்போது விமர்சித்தார். மேலும் கம்யூனிஸ்ட் கட்சி அவரை ஒரு ஆர்.எஸ்.எஸ் ஏஜென்ட் என்று முத்திரை குத்தியது, அவரை மனநல அடைக்கலத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கூறியதும் நினைவு கூரத்தக்கது. இத்தகைய தீவிர மதவாத அமைப்புகளின் கைகளில் சிக்கிகொண்டுள்ள இடதுசாரி அரசு, அவர்கள் கைகளில் வெறும் பொம்மையாக மாறி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.