தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக காவல் துறையின் துணை அமைப்பாக ஊர்க்காவல் படை பணியாற்றி வருகிறது. இவர்களுக்கு 2,800 அல்லது 5,600 ரூபாய் மட்டுமே மாத சம்பளமாக கிடைக்கிறது. இந்த தொகை குடும்பம் நடத்த போதுமானதில்லை. இதற்காக பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தேன். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஊர்க்காவல் படையினருக்கு ஒப்பந்த அடிப்படையில், ஒரு மாதத்தில் 5, 10 நாட்கள் மட்டுமே பணி தருவது குறைவு. ஒரு நாள் ஊதியம் காவல்துறையினருக்கு கிடைக்கும் ஊதியத்திற்கு சமமாக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே 2015ல் தீர்ப்பு வழங்கியுள்ளது என தெரிவித்தனர். வழக்கு முடிந்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. மாநில அரசின் அலட்சியப் போக்கை கண்டிக்கிறேன். ஊதிய உயர்வுக்கான உத்தரவை உடனடியாக வெளியிட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.