டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வரும் அதே வேளையில், ஹங்கேரி நாட்டு புடாபெஸ்டில் உலக (ஜூனியர் லெவல்) மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பாரதத்தை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக் மாலிக் 73 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.