பொன். மாணிக்கவேல் புகார்

காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்துக்கு ஸேண்ரா ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல்,“காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி திருமால்புரத்தில் இருந்த கிபி 1,071ம் வருட பழமையான நின்று அருளிய பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் கோயிலை காணவில்லை” என்று புகார் தெரிவித்துள்ளார். பிறகு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காஞ்சிபுரம் அருகே ஒரு பெருமாள் கோயிலே திடுடு போயுள்ளது.அது நமது மண்ணில் இருந்தே காணாமல் போய்விட்டது.1071ம் ஆண்டு கட்டப்பட்ட பரந்தகத் தேவர் என்ற சோழர்காலத்தை சேர்ந்த இந்த கோயில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை வழிபாட்டில் இருந்துள்ளது.பின்னர் கோயில் சீரமைப்பு என்ற பெயரில் அந்தக் கோயில் முழுவதுமாக களவாடப்பட்டுள்ளது.சீரமைப்பு என்ற பெயரில் இந்தக் கோயிலில் இருந்த கல்வெட்டுகள், சிலைகள் எல்லாம் வெளியே கொண்டு செல்லப்பட்டன.அதன் பின்னர் அவை திரும்பி வரவில்லை என்று இங்குள்ள பெரியவர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தக் கோயில் தொடர்பான கல்வெட்டு 1906ல் ஐரோப்பிய கிறிஸ்தவ ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.இப்படி, திருப்பணி என்ற பெயரில் கோயில் களவாடப்பட்டதை அதிகாரிகள் காவல் நிலையத்துக்கு தெரிவிக்காமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றம்.எனவே இது குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு பிரிவை சேர்ந்த உயர் அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.