சிருங்கர் கௌரி கோயில் ஞானவாபி மசூதி வளாகம் தொடர்பான முக்கிய நீதிமன்ற விசாரணையையொட்டி, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மசூதி வளாகத்தின் பிரத்தியக புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில், மசூதி அடித்தளத்தில் ஹிந்து சின்னங்கள் மற்றும் சிலைகள் மறைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தை காட்டுகிறது. இதுகுறித்து டைம்ஸ் நவ்விடம் பிரத்தியேகமாகப் பேசிய மனுதாரரான விஷ்ணு ஜெயின், தாங்கள் முன்வைத்த வாதத்திற்கு இவை உறுதியான ஆதாரம். இந்த புகைப்படங்கள் மசூதிக்கு அடியில் கோயில் உள்ளதை நிரூபிப்பதால், நீதிமன்றத்தின் வாதங்களில் இது முன்வைக்கப்படும். நீதிபதி அந்த இடத்தைப் பார்வையிட வேண்டும் என்று முஸ்லிம் தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கோரிக்கையை நீதிமன்றம் பரிசீலிக்கும். அதனை நாங்களும் ஆதரிப்போம். மேலும், அந்த இடத்திற்குள் நுழைய உத்தரவு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்’ என்று கூறினார். 1990களில் மூத்த பத்திரிகையாளர் ராம்பிரசாத் சிங் காசியில் எடுத்த சில படங்களில் இந்த வளாகத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் காட்டுகிறது. ராம் கதா மண்டபம், மேற்கு வாயில், சிருங்கர் மண்டபம் என்று குறிப்பிடப்படுகிறது, இது தாமரை, ஸ்வஸ்திக் மற்றும் நாகர் பாணி கட்டிடக்கலைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.