விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காகிதக்கூழ், களி மண் போன்ற பொருட்களை பயன்படுத்தி விநாயகர் சிலைகளை தயாரித்து வருபவர்களின் இடங்களுக்கு, சில ஆண்டுகளாக, முன்னறிவிப்பு ஏதும் இல்லாமலும், சட்ட விதிகளை பின்பற்றாமலும், கவல்துறையினர், வருவாய் அதிகாரிகள் சீல் வைக்கின்றனர். தொழிலுக்கு இடையூறு செய்கின்றனர், சில இடங்களில் சிலைகள் அடித்து நொறுக்கப்படுகிறது. மனிதாபிமானமற்ற முறையில் கலைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. எனவே, சட்ட நடவடிக்கைகளை பின்பற்றாமல், விநாயகர் சிலை தயாரிப்பவர்களின் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு கைவினை காகிதக்கூழ் விநாயகர் சிலைகள், களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க, அரசுக்கு உத்தரவிட்டு வரும் 17ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தார்.