தாய்லாந்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

கொரோனாவை காரணம் காட்டி நமது தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்கள்தான் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தடைகள் விதித்தன. ஆனால், அதே கொரோனா பிரச்சனைகள் உள்ள பல வெளிநாடுகளில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவ்வகையில், தாய்லாந்து நாட்டில் உள்ள ரங்க்சிட் பல்கலைக்கழகம் தனது 3வது ஆர்.எஸ்.யு சர்வதேச விநாயகர் சதுர்த்தி விழாவை மிக சிறப்பாக, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் நடத்தியது. அங்குள்ள பாரதத் தூதரகத்தை பிரதிநிதி ஆஷிஸ் ராய் சௌத்ரி தனது மனைவியுடன் முக்கிய விருந்தினராக இந்த விழாவில் கலந்து கொண்டார். 3 நாட்களாக நடைபெற்ற இவ்விழாவில் தாய்லாந்தில் உள்ள பாரத சமூகத்தினர் உட்பட ஆயிரக் கணக்கானவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.